ஒருதலைக் காதலால் பள்ளி ஆசிரியரை கொலை செய்த கல்லூரி மாணவர்..!

ரம்யாவின் வகுப்பறைக்கு சிலர் வந்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் கழுத்தறுபட்டு கீழே கிடந்துள்ளார் ரம்யா.

ஒருதலைக் காதலால் பள்ளி ஆசிரியரை கொலை செய்த கல்லூரி மாணவர்..!
மாதிரிப்படம்
  • News18 Tamil
  • Last Updated: February 22, 2020, 12:06 PM IST
  • Share this:
கடலுார் மாவட்டத்தில் ஒருதலைக் காதலால், பள்ளி வகுப்பறையில் ஆசிரியை கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார் கல்லுாரி மாணவர் ஒருவர்.

கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ரம்யா. வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளார் ரம்யா. அப்போது பள்ளியில் யாரும் இல்லை. சிறிதுநேரம் கழித்து பள்ளிக்கு ஒவ்வொருவராக வரத் தொடங்கியுள்ளனர். ரம்யாவின் வகுப்பறைக்கு சிலர் வந்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் கழுத்தறுபட்டு கீழே கிடந்துள்ளார் ரம்யா.

அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாகப் பள்ளி நிர்வாகம் மற்றும் குறிஞ்சிப்பாடி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர், விரைந்து வந்த போலீசார், ரம்யாவின் உடலை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரம்யாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது அவரை ஒருதலையாகக் காதலித்த ராஜசேகர் என்ற இளைஞர்தான் என்பது தெரியவந்துள்ளது.
First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading