மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

9 மற்றும் 10 வகுப்பு மாணவிகள் பலர், ஆசிரியர் உடலை வருடுவது, பின்பக்கம் தொடுவது, தேவையில்லாத இடங்களை பார்ப்பது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருவதாக தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

Yuvaraj V | news18
Updated: September 17, 2019, 10:54 PM IST
மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
மாதிரிப் படம்
Yuvaraj V | news18
Updated: September 17, 2019, 10:54 PM IST
புதுச்சேரியில் அரசுப்பள்ளியில் 9, 10-ம் வகுப்பு மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரை கண்டித்து பள்ளியை மூடி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சார்ந்தவர் ராஜசேகர். இவர் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றிய அவர் கடந்த 1 வருடமாகத்தான் பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றுகிறார். அங்கு 9 வது மற்றும் 10 வகுப்பு மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் 9 மற்றும் 10 வகுப்பு மாணவிகள் பலர், ஆசிரியர் உடலை வருடுவது, பின்பக்கம் தொடுவது, தேவையில்லாத இடங்களை பார்ப்பது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருவதாக தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.


இதனையடுத்து 12 மாணவிகளின் பெற்றோர்கள் இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்தனர். அவர்கள் பள்ளிக்கே சென்று விசாரணை மேற்கொண்டதில் ஆசிரியர் இதுபோன்று பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்து. இதை அடுத்து வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் ராஜசேகர் மீது புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ய சென்றபோது தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் ஆசிரியர் ராஜசேகரை கைது செய்ய வலியுறுத்தி பிள்ளையார்குப்பம் கிராம மக்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை பூட்டி ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.

பெற்றோர்களின் போராட்டத்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்குள் செல்ல முடியாமல் வெளியே காத்திருந்தனர். இதனிடையே போராட்டம் நடத்திய பள்ளிக்கு முதன்மை கல்வி அதிகாரி ரங்கநாதன் நேரில் சென்றார். போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்தை நடத்திய அவர், ஆசிரியர் ராஜசேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறி அதற்கான ஆணையை காண்பித்தார்.

Loading...

இதனையடுத்து 2 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதை அடுத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்குள் சென்றனர். வேலியே பயிரை மேய்வது போல், மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத்தந்து பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய சம்பவம் புதுச்சேரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also see:

First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...