• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சொந்த செலவில் அரசுப்பள்ளியை சீரமைக்க உதவிய தலைமை ஆசிரியர் பூங்கொடி..

சொந்த செலவில் அரசுப்பள்ளியை சீரமைக்க உதவிய தலைமை ஆசிரியர் பூங்கொடி..

மாதிரி படம்

மாதிரி படம்

இந்த தலைமை ஆசிரியர் பூங்கொடி தினமும் 55 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளியை அடைவதாக கூறப்படுகிறது. இந்த தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஒரே ஆசிரியரும் இவர்தான்.

  • Share this:
ஆசிரியர்கள் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் மாணவர்களின் வாழ்க்கையை ஒழுங்கமைக்கும் திறனைக் கொண்டுள்ளனர். தன்னுடைய சக்தியின் வாயிலாக நல்ல ஒழுக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தும் திறமை ஆசிரியர்களுக்கு உண்டு. மேலும் நீண்ட தூர பயணம் போன்ற சவால்களை எதிர்கொண்டு சில ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், தன்னலம் பார்க்காமல் தனது சொந்த பணத்தை பள்ளி கட்டிடத்தின் பழுதுபார்க்கும் பணிக்காக செலவிட்டுள்ளார். 

பழுதான மேற்கூரை மற்றும் சேதமடைந்த சுவர்கள் கொண்ட ஒரு கட்டிடத்தில் படிக்கும் போது தனது பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்களை புரிந்து கொண்ட தலைமை ஆசிரியர் என்.பூங்கொடி (N Poonkodi), வளாகத்தை மீண்டும் கட்ட தனது சொந்த பணத்தை பயன்படுத்தினார். கிருஷ்ணகிரியின் (Krishnagiri) மாவட்டம் தென்கனிகோட்டை தாலுகாவின் கருகாகொல்லை (Karukakollai) கிராமத்தில்  அமைந்துள்ள இந்த பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் சுமார் 20 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளியை பழுது பார்க்கும் பணிகளுக்காக தலைமை ஆசிரியர் அரசாங்கத்திடமிருந்து பெற்ற ரூ .1 லட்சம் நிதியைப் பயன்படுத்தினார். 

இருப்பினும், பள்ளியின் சுவர்களில் வர்ணம் பூசுவதற்காக மேலும் ரூ.30,000 பணத்தை பள்ளி மாணவர்களுக்காக கொடுத்துள்ளார். அந்த பணத்தை வைத்து பள்ளியில் சுவர்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்கள், முக்கிய தலைவர்களின் உருவப்படங்கள் மற்றும் பெருக்கல் அட்டவணைகள் ஆகியவை வரையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் பூங்கோடி சிறிதும் யோசிக்காமல் தனது சொந்த பணத்தை பழுதுபார்க்கும் பணிக்காக முதலீடு செய்துள்ளார். வகுப்பறைகளில் ஏற்பட்ட சேதங்கள் சரிசெய்யப்பட்ட பின்னர் தனது மாணவர்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த தலைமை ஆசிரியர் தினமும் 55 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளியை அடைவதாக கூறப்படுகிறது. இந்த தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஒரே ஆசிரியரும் இவர் தான். தனியார் பத்திரிகையில் வெளியான அறிக்கையின்படி, மேற்கூரையை சரிசெய்வதைத் தவிர, வகுப்பறைகளின் தளத்தை சரிசெய்ய அவர் சுமார் ரூ.37,000 செலவிட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக பள்ளியில் உள்ள வகுப்பறை ஒன்றில் தளங்களுக்கு பதிலாக ஓடுகள் வைக்கப்பட்டிருந்தன என்றும் கூறப்படுகிறது. 2005-2006 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், முதன்மை கல்வி அதிகாரி ஆர்.முருகனுக்கு ஒரு கோரிக்கையை அனுப்பிய பின்னர் பள்ளி கட்டிடத்தை பழுதுபார்க்கும் பணிக்காக ரூ .1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

நாட்டின் சிறிய கிராமங்கள் மற்றும் டவுன்களில் உள்ள அரசு பள்ளிகள் பொதுவாக சேதமடைந்த நிலையில் தான் இருக்கின்றன. இருப்பினும், பூங்கோடியை போலவே, பல ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு உதவ சில அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அசோக் லோதி (Ashok Lodhi) என்பவர் தனது மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க எல்.ஈ.டி டிவியுடன் தனது பைக்கில் பயணம் செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் தனது தொலைக்காட்சியில் பாடல்களையும் கார்ட்டூன்களையும் போட்டு காண்பித்து, பட்பானி பகுதி மாணவர்களுக்கு பாடம் கடற்பித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: