டெட் தேர்வு 2ம் தாள் முடிவு இணையதளத்தில் வெளியீடு!

Vijay R | news18-tamil
Updated: August 21, 2019, 8:47 PM IST
டெட் தேர்வு 2ம் தாள் முடிவு இணையதளத்தில் வெளியீடு!
ஆசிரியர்கள் மாதிரிப்படம்
Vijay R | news18-tamil
Updated: August 21, 2019, 8:47 PM IST
ஆசிரியர் தகுதித்தேர்வு டெட் இரண்டாம் தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பணி புரிய வேண்டும் என்று விதி உள்ளது. அதனடிப்படையில், 2013 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.

நீதிமன்ற வழக்குகள் காரணமாக 2018-ம் ஆண்டு நடைபெறவேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை. அதனையடுத்து, இந்த ஆண்டு ஜூன் 8, 9-ம் தேதிகளில் முதல் தாள், இரண்டாம் தாள் என்று ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.


ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வை  3லட்சத்து 79ஆயிரத்து 733பேர் எழுதி இருந்தனர். 6ம் வகுப்பு முதல் 8வகுப்பு வரை வகுப்புகள் எடுக்க இத்தேர்வில் தேர்சி பெறுபவர்கள் தகுதியுடையவர்கள்.

Also Watch

First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...