இனி யாருக்கும் பாரமாக இருக்கப் போவதில்லை... வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ஆசிரியை தற்கொலை

ஆசிரியர் தற்கொலை

சிவகங்கை அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வாட்ஸ் அப்பில் இனி யாருக்கும் பாரமாக இருக்கப் போவதில்லை என ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காண்டீபன். இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 32) இவர் தேவகோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

  அதுமட்டுமில்லாமல் தேவகோட்டையில் சொந்தமாக நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவருடைய செல்போனில் உள்ள வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றி. நான் இனிமேல் யாருக்கும் பாரமாக இருக்கப் போவதில்லை என்று வைத்துள்ளார்.  இதனை பார்த்த அவரிடம் நடனம் பயின்று வரும் மாணவி ஒருவர் ஆசிரியர் புவனேஸ்வரியின் கணவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கணவர் காண்டீபன் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார் செல் போனை எடுக்காததால் வெகுநேரமாக வீட்டுக்கு வராததாலும் காண்டிபன் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று புகார் மனு அளித்துள்ளார்.

  புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் ஆசிரியை புவனேஸ்வரியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் போனை யாரும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் செல்போன் இருக்கும் இடத்தை செல்போன் டவர் மூலம் கண்டறிந்தனர்  பின்னர் அப்பகுதிக்கு சென்ற போலீசார் புவனேஸ்வரியை தேடினர் அப்போது காரைக்குடி திருச்சி பைபாஸ் சாலையில் புவனேஸ்வரி பயன்படுத்தும் இருசக்கர வாகனம் இருந்ததை கண்டனர். பின்பு காவல் துணை கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் சாலையின் இருபுறமும் உள்ள காட்டுப்பகுதியில் தேடினர்.

  அப்போது அங்கு இருந்த ஒரு மரத்தில் புவனேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.  இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் காட்டுப்பகுதியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
   
  Published by:Sankaravadivoo G
  First published: