Home /News /tamil-nadu /

டீ செலவு மிச்சம் vs டீசல் செலவு மிச்சம்.. பரபரக்கும் தேநீர் விருந்து பாலிடிக்ஸ்...!!

டீ செலவு மிச்சம் vs டீசல் செலவு மிச்சம்.. பரபரக்கும் தேநீர் விருந்து பாலிடிக்ஸ்...!!

டீ செலவு மிச்சம் என உரிமைப் பிரச்சைக்கான புறக்கணிப்பை மலினப்படுத்துவதா? என ஆளூர் ஷாநாவாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

டீ செலவு மிச்சம் என உரிமைப் பிரச்சைக்கான புறக்கணிப்பை மலினப்படுத்துவதா? என ஆளூர் ஷாநாவாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

டீ செலவு மிச்சம் என உரிமைப் பிரச்சைக்கான புறக்கணிப்பை மலினப்படுத்துவதா? என ஆளூர் ஷாநாவாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

    ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்ததால் செலவு மிச்சம் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

    தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக அரசியல் கட்சிககளுக்கு நேற்று மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார். ஆளுநரின் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநர் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது விருந்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்தன. அதனைத் தொடர்ந்து திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

    இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும் புறக்கணித்ததால் ஆளுநர் மாளிகைக்கு டீ செலவு மிச்சம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

    இதையும் படிங்க: இந்து கடவுள்கள் குறித்து அவதூறு.. அரசு பள்ளியில் மதமாற்றம்: ஆசிரியை பற்றி போலீஸில் மாணவி புகார்

    இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ ஆளுர் ஷாநவாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், தேநீர் விருந்துக்கு செல்லாததால் டீ செலவு மிச்சம் என உரிமைப் பிரச்சைக்கான புறக்கணிப்பை மலினப்படுத்துவதா? அப்படியென்றால் பெட்ரோல், டீசல் விற்குல் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று வர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.



    எம்.எல்.ஏ ஆளுர் ஷாநவாஸின் இந்த பதிவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரீட்வீட் செய்து, தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம் அண்ணாமலை கூறியதை போன்று நிதி சேமிப்பு இருந்ததா, இல்லையா என அறிய, உரிய கோப்புகள் வரும் வரை காத்திருப்போம் என, பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Annamalai, BJP, DMK

    அடுத்த செய்தி