தமிழகத்தில் நிதிநிலை வளர்ச்சி ஏற்பட வேண்டுமென்றால் வரியை உயர்த்தி ஆக வேண்டும் - பொருளாதார வல்லுநர்

மாதிரி படம்

தமிழகத்தில் நிதிநிலை வளர்ச்சி ஏற்பட வேண்டுமென்றால் வரியை உயர்த்தி ஆக வேண்டும் என பொருளதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • Share this:
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க முதலில் நிதிநிலை அறிக்கையை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தது. இதனையடுத்து தமிழகத்தில் விரைவில் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய  நிதி நிலைமையை விளக்கும்,வெள்ளை அறிக்கையை  நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார்.

அதில், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில்  1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துவிட்டது.இந்தியாவில் எந்த பெரிய மாநிலமும் இந்த அளவிற்கு சரியவில்லை. ல் ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் 2,63, 976 கடன் சுமை உள்ளது என பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். இதனால் வரும் 13-ம் தேதி தாக்கல் செய்ய உள்ள தமிழக பட்ஜெட்டில் வரிகள் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : திமுகவின் வெள்ளை அறிக்கையை ஒற்றை மீமில் கலாய்த்த அதிமுக!

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை தொடர்பாக பொருளாதார வல்லுனர் ஆனந்த் சீனிவாசன் பேட்டி அளித்தார். அப்போது,  தமிழ் நாட்டின் நிதி நிலை வளர்ச்சி மிகவும் குறைந்து உள்ளது என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பாக காலத்திற்கேற்ப உயர்த்த வேண்டிய விலைகளை உயர்த்தாமல் இருந்துள்ளதை நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மின் கட்டணம் ஏற்கனவே தொழில் சார்ந்தவர்களுக்கு அதிக விலையில் தான் வழங்கப்படுகிறது எனவே குறைந்த கட்டணத்திற்கு விற்பனையாகும் இரண்டு ரூபாய் என்பதிலிருந்து தான் உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் பேருந்து கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 59 ரூபாய் இழப்பு என்று தெரிவித்துள்ளார். எனவே அதை ஈடு கட்டுவதற்கு பேருந்து கட்டணம் உயரக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்


தமிழகத்தை பொறுத்த வரை ஜிஎஸ்டி வருவாய், டாஸ்மாக் வருவாய், பத்திரப்பதிவு வருவாய் மற்றும் மோட்டார் வாகன வருவாய் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே நிதி பெற கூடிய சூழல் உள்ளது. இந்த நிலையில் வரி உயர்வு செய்தால் மட்டுமே நிதி நிலைமையை சரிசெய்ய முடியும். அதை நிதி அமைச்சர் எப்படி செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறினார்.

Also Read : ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் காணாமல் போனதாக அவர் கூறவில்லை. ஒரு லட்சம் கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது ஒரு திட்டத்திற்கு என்று நிதி பெற்றுக்கொண்டு அதை மற்றொரு திட்டத்திற்கு செலவு செய்வது போன்ற செயல்களால் இரண்டு திட்டங்களும் பாதிக்கும், நிதி இழப்பை வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்பதை தான் வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: