TAX RAIDS ON DMK MK STALIN SON IN LAW 4 PLACES IN CHENNAI SKV
வயிற்றெரிச்சல் ,'சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணத்தை நிறுத்த முடியாது' - ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாரை - மருமகன் சபரீசன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணத்தை நிறுத்த முடியாது என திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கார்த்திக் மோகன் மற்றும் பாலா ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை. அவர் தன் கணவர் சபரீசனோடு சென்னை நீலாங்கரை இல்லத்தில் வசித்து வருகின்றனர். இன்று அவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி நியூஸ்18தொலைக்காட்சிக்கு தெரிவிக்கையில், மோடியின் அரசை பார்த்து ஊரே சிரிக்கிறது. இது மிக கேவலமான அரசியல்வாதிகள் நாட்டை வழிநடத்துகின்றனர் என்பதற்கான செய்கை. செல்வாக்கு பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாக இதனை செய்கின்றனர். இவர்கள் செய்ய செய்ய கூடுதல் வெற்றி தான் எங்களுக்கு கிடைக்கும்.
சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணத்தை நிறுத்த முடியாது.இதனை நாங்கள் பார்த்து பழக்கப்பட்டவர்கள். தட்ட தட்ட தான் பந்து உந்தும். அரைக்க அரைக்க தான் சந்தானம் மணக்கும். தீட்டத் தீட்ட தான் வைரம் ஜொலிக்கும் இதை எல்லாம் பார்த்து பழக்கப் பட்டவர்கள். தேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் இது திட்டமிட்டு பழி வாங்குவதற்கான செயல் எனத் தெரிவித்துள்ளார்.