Home /News /tamil-nadu /

சென்னை ஃபோர்டு கார் நிறுவனத்தை வாங்க டாடா முயற்சி

சென்னை ஃபோர்டு கார் நிறுவனத்தை வாங்க டாடா முயற்சி

ஃபோர்டு ஆலை

ஃபோர்டு ஆலை

சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்ட் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையை டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்தியாவில் 10 ஆண்டுகளில் 14ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதால் தனது இரு ஆலைகளையும் மூடிவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேற உள்ளதாக Ford நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை மறைமலை நகரில் உள்ள கார் உற்பத்தி வசதிகளை டாட்டா நிறுவனம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கடந்த 2008ம் ஆண்டில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வகை கார்களின் பிராண்ட் உரிமையை ford நிறுவனத்திடம் இருந்து டாடா நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியது நினைவிருக்கலாம்.

    இந்நிலையில் குஜராத் மற்றும் சென்னையில் உள்ள ford ஆலைகளை வாங்க டாடா குழுமம் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. இந்த இரு ஆலைகளிலும் passenger vehicle எனப்படும் பயணியர் கார்களையும், மின்சார கார்களையும் உற்பத்தி செய்ய டாடா நிறுவனம் உத்தேசித்துள்ளதாகவும் தெரிகிறது.

    ஆசியாவின் டெட்ராய்ட் என வர்ணிக்கப்படும் சென்னையில் டாட்டா நிறுவனத்துக்கு என உற்பத்தி ஆலை தற்போது இல்லாத நிலையில் அதனை அமைக்க டாடா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. ஃபோர்டு நிறுவன ஆலையை கையகம் செய்யும் நிறுவனத்துக்கு மாநில அரசு கூடுதல் சலுகைகளை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரு நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மறைமலை நகர் ஆலையை கையகப்படுத்த டாட்டா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ford

    அடுத்த செய்தி