TASMAC : டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் ரூ.252.48 கோடிக்கு மது விற்பனை

டாஸ்மாக்

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று ஒரே நாளில் 252.48 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது

  • Share this:
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு முன்கூட்டியே அறிவித்ததை அடுத்து மது பிரியர்கள் தங்களுக்குத் தேவையான மதுபானங்களை நேற்று வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதேவேளையில் அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காற்றில் பறந்தன.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூபாய் 252.48 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 58.37 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரை 49.43 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 47.79 கோடி ரூபாய்க்கும், கோவையில் 48.32 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளது. அதேபோல் திருச்சியில் ரூ.48.57 கோடி ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 58.37 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டு சென்னை மண்டலம் முதலிடத்தைப் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: