சென்னை: 10 சதவீத தீபாவளி போனஸை 30 சதவீதமாக உயர்த்தக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

10 சதவீத தீபாவளி போனஸை 30 சதவீதமாக உயர்த்தக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

செம்பரம்பாக்கம் அரசு அறிவித்த 10 சதவீத தீபாவளி போனஸை 30 சதவீதமாக உயர்த்தி தர கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

 • Share this:
  சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக  டாஸ்மாக் ஊழியர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  Also read: அதிவேக வாகன பயணத்தால் இந்தியாவில் அதிகரிக்கும் விபத்துகள் - புள்ளிவிவரம் சொல்வது என்ன?

  அந்த ஆர்ப்பாட்டத்தில் தீபாவளிக்கு அரசு அறிவித்த 10 சதவீத போனஸை 30 சதவீதமாக உயர்த்தவும், பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், டாஸ்மாக் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும், கொரோனாவால் இறந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தொழிலாளர் நலனைக் கருத்தில்கொண்டு காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை கடை திறக்க அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 150-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  Published by:Rizwan
  First published: