கோவில்பட்டி பகுதிகளில் வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்...! பணப்புழக்கம் இல்லாததே காரணம் என தகவல்

இதற்கு அடுத்தப்படியாக திருச்சியில் 41 கோடிக்கும், சேலத்தில் 40 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. கடந்த வார சனிக்கிழமையை விட இந்த வாரம் கூடுதலாக 12 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது.

போதிய பணம் இல்லாத சூழ்நிலையில் கூட்டம் குறைவாக காணப்பட்டதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று முதல் விற்பனையை தொடங்கியுள்ள நிலையில், கோவில்பட்டி பகுதியில் உள்ள பல கடைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே நபர்கள் வந்துள்ளனர்.

கொரோன ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதிலும் இன்று திறக்கப்பட்டள்ளன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 73 டாஸ்மாஸ்க் கடைகள் இன்று காலை திறக்கப்பட்டன.

நீண்ட நாளைக்கு பின்னர் கடைகள் திறக்கப்படுவதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டம் வெகு குறைவாக காணப்பட்டது. சில கடைகளில் மட்டுமே 10க்கு மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றனர். பல கடைகளில் 3 அல்லது 5 பேர் என மிக குறைந்த எண்ணிக்கையில் தான் இருந்தனர்.

கோவில்பட்டி பகுதி மதுக்கடைகள்


சில கடைகளில் ஆதார் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே மது பானங்கள் வழங்கப்பட்டன. ஊரடங்கு காரணமாக ஜெராக்ஸ் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிலர் செல்போனில் ஆதார் அடையாள அட்டை எண்ணை காண்பித்து மது வாங்கி சென்றனர்.

40 நாளுக்கு மேல் சிறு,குறு தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் போதிய பணம் இல்லாத சூழ்நிலையில் கூட்டம் குறைவாக காணப்பட்டதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள்


இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

படிக்க: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை விபரங்கள் வெளியீடு - முழு பட்டியல்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published: