குடிமகன்கள், பொருளாதாரம் இரண்டும் பாதிக்கக் கூடாது - டாஸ்மாக் திறப்புக்கு அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்

டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

குடிமகன்கள், பொருளாதாரம் இரண்டும் பாதிக்கக் கூடாது - டாஸ்மாக் திறப்புக்கு அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்
அமைச்சர் செல்லூர் ராஜு
  • News18
  • Last Updated: May 5, 2020, 10:12 AM IST
  • Share this:
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரும் 7-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு, மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நிபந்தனைகளுடன் வரும் 7-ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் அங்கு செல்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதனால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மதுபானக் கடைகளை வரும் 7-ம் தேதி முதல் திறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், ஒவ்வொரு நபருக்கும் இடையேயான இடைவெளி 6 அடி தூரமாக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.மதுபானக் கடைகளை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், மதுபானக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்புக்கு ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன், டிடிவி தினகரன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, வேல்முருகன் என்று பல்வேறு கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு இது தொடர்பான கேள்விக்கு, “எல்லாரும் மதுக்கடையை திறந்த பின் நாம் திறக்காமல் இருக்க முடியாது. குடிமகன்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவும், பொருளாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான் டாஸ்மாக் கடையை திறக்க முதல்வர் முடிவு செய்தார்” என்று கூறியுள்ளார்.


First published: May 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading