நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணிநேரத்துக்கு முன்பே மதுபானக் கடைகளை மூட வேண்டுமென்றும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vijay R | news18
Updated: April 15, 2019, 9:59 PM IST
நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்
டாஸ்மாக்
Vijay R | news18
Updated: April 15, 2019, 9:59 PM IST
தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைப்பெற உள்ளன. சூடுப்பிடித்து இருக்கும் அரசியல் களத்தில் தேர்தல் பரப்புரை நாளை உடன் முடிவடைய உள்ளது.

தேர்தலை முன்னிட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு குறித்தும் தலைமைத் தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியது.

அதில், தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணிநேரத்துக்கு முன்பே மதுபானக் கடைகளை மூட வேண்டுமென்றும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் மூடப்பட உள்ளதால், மதுப்பானம் வாங்க கடை முன் ஏராளமானோர் குவிந்து உள்ளனர்.

டாஸ்மாக் மூடப்பட்டிருக்கும் நிலையில் கூடுதல் விலைக்கு யாராவது மதுப்பானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுப்போன்று வாக்குகள் எண்ணப்படும் மே 23-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால் அன்றும் டாஸ்மாக் இயங்காது.

Also Watch
Loading...
First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...