Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.218 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.218 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

மதுக்கடை

மதுக்கடை

Tasmac | தமிழ்நாட்டில் முழு ஊரடங்கையொட்டி நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும், 218 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 11,000 பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். எனவே, கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகிறது. அதன்காரணமாக மாநிலம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கின் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்று செயல்படவில்லை. எனவே, மதுப் பிரியர்கள் நேற்றே இன்றைக்கு தேவையான மதுபானங்களை வாங்கி வைத்துள்ளனர். அதன்காரணமாக நேற்று மதுபான விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் 218 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

    பொங்கல் பரிசோடு சேர்த்து ஏன் பணம் வழங்கவில்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி



     அதில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 50 கோடி ரூபாயும், மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 42.59 கோடி ரூபாய்க்கும் ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. 


    இதேபோன்று, கோவை மண்டலத்தில் 41.28 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 40.85 கோடி ரூபாய்க்கும் மதுபான பானங்கள் விற்றுள்ளன. முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுபிரியர்கள் நேற்றே மதுபாட்டில்களை வாங்கி குவித்துள்ளனர். வழக்கமாக சனி, ஞாயிறுகளில் தமிழ்நாட்டில் 270 கோடி ரூபாய் அளவிற்கு, மதுபானங்கள் விற்பனையாகும்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Tasmac

    அடுத்த செய்தி