Tasmac | சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

டாஸ்மாக்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

  • Share this:
    டாஸ்மாக் கடைகளை திறக்கும் போதும், மூடும் போது கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.  இதேபோல் கடைக்கு வெளியே ஒரு நாளைக்கு இரண்டு முறை பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்.கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த கட்டாயம் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். 6 அடி இடைவெளியில் ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டங்கள் அமைத்து தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க இரண்டு பணியாளர்களை நியமிக்கவும் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... Petrol Diesel Price | "பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை": மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்

    இந்த ஊழியர்கள் மூன்றடுக்கு முகக்கவசம் மற்றும் ஒரு முறை மட்டுமே அணியும் கையுறை போட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடைக்கு வரும் நபர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட வேண்டும். ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிப்பதுடன், அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும்.

    மேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூன் 14, 2021)

    ஒரே நபருக்கு அதிக அளவிலான மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. மது வாங்கிச் செல்பவர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் குடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாலை 5 மணிக்குள் விற்பனையை முடித்து கடையை மூடி விட வேண்டும். இந்த அறிவுரைகளை பின்பற்றாத கடைகள் மற்றும் ஊழியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிகை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published: