தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு!

டாஸ்மாக்

சிவப்பு, பச்சை, நீலம் என்று ஏழு வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது. அந்த நிறங்களுக்கு ஏற்பதான் மதுபானங்கள் வழங்கப்படும்

 • Share this:
  மதுபானக் கடைகளைத் திறக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டநிலையில், தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், வழக்கை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்தது. அதன்மூலம், மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது.

  அதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், சிவப்பு மண்டலங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. உரிய சமூக இடைவெளி பின்பற்றப்படும். மது வாங்க வருபவர்களுக்கு வாகனங்களை நிறுவத்துவதற்கு உரிய இடம் வழங்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு, பச்சை, நீலம் என்று ஏழு வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது. அந்த நிறங்களுக்கு ஏற்பதான் மதுபானங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
   

  Also see:
  Published by:Karthick S
  First published: