தமிழ்நாடு முழுவதும் வழக்கமாக எல்லா ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். இந்நிலையில் டாஸ்மாக் கடையை ஜனவரி 12 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மூடுவதற்கு சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேப் போன்று மற்ற மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவை வெளியிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டத்தில் 16.01.2023 அன்று "திருவள்ளுவர் தினம்", மற்றும் 26.01.2023-அன்று "குடியரசு தினம்" ஆகியவற்றை முன்னிட்டு, அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபானக் கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை மேற்கண்ட நாட்களில் மூடப்பட்டு இருக்கும்.
மேற்படி நாட்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினங்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது” என தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Republic day, Tasmac, Thiruvalluvar Day