• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரடங்கை பயன்படுத்தி, டாஸ்மாக்கில் கொள்ளை... ஒரு லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்கள் சுருட்டிய நபர்கள்!

ஊரடங்கை பயன்படுத்தி, டாஸ்மாக்கில் கொள்ளை... ஒரு லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்கள் சுருட்டிய நபர்கள்!

கொள்ளையடிக்கப்பட்ட டாஸ்மாக்

கொள்ளையடிக்கப்பட்ட டாஸ்மாக்

  • Share this:
    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாந்தோப்பு பகுதியில் இரண்டாவது முறையாக டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தை ஒட்டியுள்ள உள்ளது. கும்மிடிப்பூண்டி போலீசார் தினந்தோறும் இரவு நேரங்களில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வழக்கம்போல் இன்று அதிகாலை 2 மணி அளவில் சோதனை செய்தபோது டாஸ்மாக் கதவை உடைந்து இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்பு ராக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் மேலாளர் துளசிராமன் அவருக்கு போலீசார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விரைந்துவந்த துளசிராமன் கடை உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 10 கேஸ் மது பாட்டில்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

    டாஸ்மாக் கடை முழுவதும் 4 சிசிடிவி கேமராக்கள் இருந்தது.மர்ம நபர்கள் அத்தனையும்  சிசிடிவி உடைத்துவிட்டு மதுபாட்டில்கள்  கொள்ளையடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும். மேலும் இதே அரசு மதுபானகடை கடையில் ஒரு வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையை உடைத்து 70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில்  துளசிராமன் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனா‌ல் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: