விலை உயர்த்தப்பட்டதில் இருந்து, அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) மூலம் மது விற்பனை மாநிலம் முழுவதும் நான்கு முதல் 6 சதவீதம் வரை குறைந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு மார்ச் மாதம் மதுபானங்களின் விலை 80 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது. ஆனாலும், வெளிநாட்டு மதுபானங்களின் இந்தியத் தயாரிப்பான (IMFL) பிரீமியம் ரேஞ்ச் விற்பனையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நடுத்தர அளவிலான மதுபானங்களின் விலை 20 முதல் 60 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. அதே சமயம் சாதாரண வரம்பில் உள்ள மதுபானங்கள் 50% விலை உயர்த்தப்பட்டது. நடுத்தர வரம்பில் 180 மில்லிலிட்டர் மதுப்பானம் 20 ரூபாய் உயர்ந்தது. அதே சாதாரண வரம்பில் உள்ளது 10 ரூபாய் உயர்ந்தது.
இதனால் பெரும்பாலான நடுத்தர அளவிலான மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட பிறகு அந்த நுகர்வோர்கள் எல்லாம் சாதாரண வரம்பு மதுபானங்களுக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கொரோனா பரவல் - தலைமைச் செயலகத்தில் இன்று முதல் மாஸ்க் கட்டாயம்
டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்யும் டிஸ்டில்லரிகள் தங்கள் அதிக லாப வரம்பிற்கு பிரீமியம் மற்றும் நடுத்தர அளவிலான மதுபானங்களை அனுப்ப விரும்புவதால், சாதாரண வரம்பின் இருப்பு தேவையை விட குறைவாக உள்ளது. தேவை அதிகமாக இருக்கும் சாதாரண மதுபானங்கள் இருப்பு குறைவாக இருப்பதால் மொத்த விற்பனை மற்றும் லாபம் குறைந்துள்ளது என டாஸ்மாக் தொழிற்சங்க தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு நிறுவனமும் சப்ளை செய்யும் பிராண்டுகளின் பட்டியலில், பிரீமியம் மதுபானங்கள் 60% இருக்கும். ஆனால் வெவ்வேறு டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களின் கூற்றுப்படி, நடுத்தர மற்றும் சாதாரண மதுபானங்களின் விற்பனை தலா 40% ஆக உள்ளது. ப்ரீமியம் மதுபானம் வெறும் 20% ஆக உள்ளது.
புதன்கிழமை, தென் சென்னை மாவட்டத்தில் உள்ள 83 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் டாஸ்மாக் மாவட்ட மேலாளரால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் 2019 ஆம் ஆண்டின் தரவுகளை ஒப்பிடும்போது மே மாதத்தில் விற்பனை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கோடை காலம் முடிந்து விட்டதால், டாஸ்மாக் விற்பனை குறைந்துள்ளது. மது விற்பனையை உயர்த்துவதற்கான கூட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் மது விற்பனையை அதிகரிக்க கூட்டங்கள் நடத்தப்படக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விற்பனை குறைந்ததற்கான காரணங்களை விளக்க மேற்பார்வையாளர்களின் குறைகளைப் பெறுவதற்காக மட்டுமே நடைபெற்ற வழக்கமான கூட்டம் என்று மாவட்ட மேலாளர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hiked price, Tasmac