• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் 5 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்தில் 5 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - அதிர்ச்சி தகவல்!!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தமிழகத்தில் 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொதுவாக பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் இரவு 8மணி வரை மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதனிடையே, கடந்த வருடமும், இந்த வருடம் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சில நாட்கள் அடைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு, மீண்டும் கடைகள் திறக்கப்பட்ட போது, மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதேபோல், தமிழகத்தில் தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டும் ஒரு நாள் டாஸ்மாக் விற்பனையானது, 200 கோடி அளவில் எட்டும். இப்படி தமிழகத்தின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாகவே டாஸ்மாக் இருந்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை காசிமாயன் டாஸ்மாக் விற்பனை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2010-11ல் ரூ.3.56 கோடி , 2011-12ல் ரூ.1.12 கோடி, 2012-13ல் ரூ.103.64, 2013-14ல் ரூ.64.44 கோடி, 2019-20ல் ரூ.64.44 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிகபட்சமாக 2004-05 நிதியாண்டில் டாஸ்மாக்கிற்கு ரூ.232.73 கோடி லாபம் கிடைத்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: