5 மாதங்களுக்குப் பிறகு சென்னையில் மதுபானக் கடைகள் திறப்பு - அதிகாலை முதலே காத்திருந்த கூட்டம்

5 மாதங்களுக்குப் பிறகு சென்னை பெருநகர காவல் எல்லையில் மொத்தம் உள்ள 755 கடைகளில் 720 கடைகள் இன்று திறக்கப்பட்டன.

5 மாதங்களுக்குப் பிறகு சென்னையில் மதுபானக் கடைகள் திறப்பு - அதிகாலை முதலே காத்திருந்த கூட்டம்
5 மாதங்களுக்குப் பிறகு சென்னை பெருநகர காவல் எல்லையில் மொத்தம் உள்ள 755 கடைகளில் 720 கடைகள் இன்று திறக்கப்பட்டன.
  • Share this:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள 7ம் கட்ட ஊரடங்கில் சென்னையில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் எல்லையில் மொத்தம் உள்ள 755 கடைகளில் 720 கடைகள் இன்று திறக்கப்பட்டன. வணிக வளாகங்களில் உள்ள 35 கடைகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மதுபானக் கடைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூட்ட நெறிசலைக் கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு நபர்களுக்கு இடையில் 3 அடி இடைவெளி இருக்கும் வகையில் வட்டம் வரையப்பட்டுள்ளது. கடையின் முன்பு பந்தல் அமைத்து ஒலிப்பெருக்கி மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும், ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Also read: அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் திமுகவில் இணைந்தார் - செய்தியாளர் சந்திப்பில் நடந்த சுவாரஸ்யம்

இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை டோக்கன் விநியோகம் நடைபெருகிறது. முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை 6 மணி முதலே காத்திருந்த மது குடிப்போர், கடை திறந்ததும் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். ஒவ்வொரு கடை முன்பும் 2 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
First published: August 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading