• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆதார் அவசியம்.. ஒரு டோக்கனுக்கு 4 குவாட்டர் மட்டுமே.. டாஸ்மாக் கட்டுப்பாடுகள்..!

ஆதார் அவசியம்.. ஒரு டோக்கனுக்கு 4 குவாட்டர் மட்டுமே.. டாஸ்மாக் கட்டுப்பாடுகள்..!

டாஸ்மாக்

டாஸ்மாக்

TASMAC | குடை பிடித்து சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிப்பு

  • Share this:
    தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் திறக்கப்பட உள்ள நிலையில் மது வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து டாஸ்மாக் கடைமுன் காலையிலிருந்து மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், ஆதார் அட்டை அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் ஆதார் அட்டையுடன் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கனில் 4 குவாட்டர் அல்லது 2 ஆஃப் அல்லது ஒரு ஃபுல் பாட்டில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டாஸ்மாக் கடைகளில் ஆதார் அட்டை அல்லது ஜெராக்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். வயதானவர்களுக்கு முதலில் முன்னுரிமையும், கைகழுவும் சானிட்டைசர் அடித்தும் அனுமதி வழங்கி உள்ளனர்.

    குடை பிடித்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளதால் குடை வாங்க ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

    காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 50 வயதுக்கு மேலானவர்களுக்கும், பகல் 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயதானவர்களுக்கும், 3 மணி முதல் 5 மணி வரை 40 வயதுக்கு கீழானவர்களுக்கும் மது விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.













    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: