சென்னையில் மதுபானக் கடைகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் மதுபானக் கடைகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு
டாஸ்மாக்
  • Share this:
சென்னையில் மதுபானக் கடைகள் திறப்பது குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் சென்னை பெருநக காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் 7-05-2020 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குப்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 18-08-2020 முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது.

மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபானக் கடைகளுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading