Home /News /tamil-nadu /

Tasmac shops | தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறை

Tasmac shops | தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறை

டாஸ்மாக் பார்

டாஸ்மாக் பார்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சாரங்கள் மக்களிடையே கவனத்தைப் பெற்றுவருகின்றன. உதயநிதி ஸ்டாலினும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறார். மறுபுறம் தேர்தல் ஆணையமும் சட்டமன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு ஏப்ரல் 4 - 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மதுவிலக்கு ஆணையர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4, 5, 6 ஆகிய மூன்று நாள்களில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவு வெளியாகும் மே 2-ம் தேதியும் மதுபானக்கடைகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Tasmac, TN Assembly Election 2021

    அடுத்த செய்தி