Home /News /tamil-nadu /

டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு நாளை முதல் 4 நாட்களுக்கு லீவு... இன்றே குவியும் மதுப்பிரியர்கள்..

டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு நாளை முதல் 4 நாட்களுக்கு லீவு... இன்றே குவியும் மதுப்பிரியர்கள்..

டாஸ்மாக்

டாஸ்மாக்

Tasmac Shops: நகர்ப்புற தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை முதல் தொடர்ச்சியாக  மூன்று நாட்களுக்கு விடுமுறை என்பதால்,  மதுபானங்களை வாங்கி இருப்பு வைப்பதற்காக டாஸ்மாக் கடைகளில் இன்று காலை முதல்  மதுபிரியர்கள் குவிந்து வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு நாளை முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்றே மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடைகளில் ஏராளமான மதுப்பிரியர்கள் குவிந்து வருகின்றனர்.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கு 3 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதி மற்றும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில், மதுக்கூடம் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து மாவட்டங்களுக்கும் உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால், வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் மூடியிருக்க, உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

    மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடம் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தென்னிந்திய திருச்சபைகள் பேராயர்கள் ஆதரவு!!


    நகர்ப்புற தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை முதல் தொடர்ச்சியாக  மூன்று நாட்களுக்கு விடுமுறை என்பதால்,  மதுபானங்களை வாங்கி இருப்பு வைப்பதற்காக டாஸ்மாக் கடைகளில் இன்று காலை முதல்  மதுபிரியர்கள் குவிந்து வருகின்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Alcohol, Local Body Election 2022, Tasmac

    அடுத்த செய்தி