நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள்...! கமல்ஹாசனுக்கு ரவிக்குமார் எம்.பி. புகழாரம்!

ரவிக்குமார், எம்.பி.

அடைத்துகிடக்கும் அரசின் செவிகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தட்டிக்கொண்டிருந்ததாக ரவிக்குமார் தெரிவித்தார்.

 • Share this:
  நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கமல்ஹாசனை புகழ்ந்துள்ளார்.

  ஊரடங்குக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மீண்டும் திறப்பதற்கு பல தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்க்கட்சிகள் தமிழகம் முழுக்க போராட்டங்களைச் செய்து வந்தன. இந்நிலையில் டாஸ்மாக் திறப்புக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதன்படி தற்போது மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

  இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ரவிக்குமார், “சார்! நாங்களெல்லாம் அடைத்துகிடக்கும் அரசின் செவிகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தட்டிக்கொண்டிருந்தபோது, நீங்கள் நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள்! மூச்சுத் திணறும்போது கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு சிறிதானாலும் பலன் மிகப்பெரிது!” என்று கூறியுள்ளார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Also see:
  Published by:Rizwan
  First published: