பிளாக்கில் விற்கப்படும் மது பாட்டில்கள் போலியா.. கண்டுபிடிக்க டாஸ்மாக் அதிரடி திட்டம்
பிளாக்கில் விற்கப்படும் மது பாட்டில்கள் போலியா.. கண்டுபிடிக்க டாஸ்மாக் அதிரடி திட்டம்
டாஸ்மாக்
Tasmac | டாஸ்மாக் மதுபானங்கள் உற்பத்தி தொடங்கும் இடம் முதல் விற்பனை செய்யும் இடம் வரை மொத்த இடங்களும் கணிணிமயமாக்கும் ஆரம்பகட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை முழுவதும் கணிணிமயமாகிறது
தமிழக நிதிதுறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் பத்திரிக்கையில் அளித்த நேர்காணல் மூலம் தமிழகத்தில் ஆயத்தீர் வரி லீக்கேஜ் மூலம் பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று கூறினார்.இதன் தொடர்ச்சியாக சட்ட மன்றத்தில் டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 11 மது உற்பத்தி நிறுவனங்கள், 9 பீர் உற்பத்தி நிறுவனங்கள் ,1 ஒயின் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மதுவகைகள் தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யபடுகிறது. இதில் உற்பத்தி தொடங்கும் இடம் முதல் விற்பனை செய்யும் இடம் வரை மொத்த இடங்களும் கணிணிமயமாக்கப்பட்டு மதுபாட்டில் ஒவ்வொன்றுக்கும் தனி,தனி பார்கோடுகள் மூலம் கண்காணிக்கும் வகையில் எங்கு ,எப்பொழுது தயாரிக்கபட்டது,எந்த கிடங்கில் எத்தனை நாட்கள் இருப்பு வைக்கபட்டது,எந்த கடையில் எத்தனை மணிக்கு விற்பனை செய்யபட்டது என்று கண்காணிக்கும் வகையில் முழுவதும் கணிணிமயமாக்கும் ஆரம்பகட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இது விரைவில் நடைமுறையாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனால் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் போலி மதுவா? அல்லது எந்த கடையில் யாரால் மொத்த விற்பனை செய்யப்பட்டது என்று எளிதாக கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.