• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுக்கடைகள் குறைந்தாலும், வருவாயில் சாதனை படைக்கும் டாஸ்மாக்!

மதுக்கடைகள் குறைந்தாலும், வருவாயில் சாதனை படைக்கும் டாஸ்மாக்!

மதுக் கடை

மதுக் கடை

பீர் ஏற்றுமதியில் ஒரே ஆண்டில் தமிழக அரசு 5.77 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 4 கோடி ரூபாய் வரி வருவாய் அதிகரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடப்பாண்டில் டாஸ்மாக் மூலம் வரி வருவாய் 4,360 கோடி ரூபாய் உயர்ந்திருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்தார்.

அதில், 2018-19-ம் ஆண்டில் தமிழகத்தில் டாஸ்மாக் மூலம்        31, 157 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டில் 26,797 கோடி ரூபாயாக இருந்ததாகவும், 2017-18-ம் ஆண்டைவிட நடப்பாண்டில் 4,360 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலம் அரசுக்கு வரி வருவாய் உயர்ந்திருப்பதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீர் ஏற்றுமதியில் ஒரே ஆண்டில் தமிழக அரசு 5.77 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 4 கோடி ரூபாய் வரி வருவாய் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 980 மதுபானக் கடைகள் மூடப்பட்டாலும் டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் உயர்ந்துள்ளது.

Also watch: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆசிரியர்கள், தோழிகள் என்ன சொல்கிறார்கள்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Anand Kumar
First published: