Home /News /tamil-nadu /

மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை - டாஸ்மாக் நிறுவனம் பதில்

மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை - டாஸ்மாக் நிறுவனம் பதில்

டாஸ்மாக்

டாஸ்மாக்

டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மதுவை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்வது என்று தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து, அதுதொடர்பாக அரசாணை பிறப்பித்தது. அரசின் கொள்கை முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
தமிழகத்தில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், பிரதாப் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் அது மனித உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும். ஆனால், இந்த அரசாணையின்படி மதுவை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவம் முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

Also read... மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பாக ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து

இந்த வழக்கிற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மதுவை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்வது என்று தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து, அதுதொடர்பாக அரசாணை பிறப்பித்தது. அரசின் கொள்கை முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது.

அதேநேரம், தற்போது வரை மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court, Tasmac

அடுத்த செய்தி