ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாளை டாஸ்மாக் திறப்பு - கடலூரில் ஒரு நபருக்கு ஒரு மதுபாட்டில் மட்டுமே வழங்க உத்தரவு

நாளை டாஸ்மாக் திறப்பு - கடலூரில் ஒரு நபருக்கு ஒரு மதுபாட்டில் மட்டுமே வழங்க உத்தரவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுக்கடைகள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  நாளை டாஸ்மாக் திறக்கப்பட உள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒரு மதுபாட்டில்கள் மட்டுமே வழங்க மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். 

  கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  எனினும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் வரும் பகுதிகளில் கடைகள் நாளை திறக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

  டாஸ்மாக் கடைகளில் உரிய பாதுகாப்பு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.

  கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும். கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

  அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.  மதுக்கடைகள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 50 வயதுக்கு மேலானவர்களுக்கும், பகல் 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயதானவர்களுக்கும், 3 மணி முதல் 5 மணி வரை 40 வயதுக்கு கீழானவர்களுக்கும் மது விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில், கடலூரில் ஒருவருக்கு ஒரு மதுபாட்டில்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.மேலும் பொது இடத்தில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

  படிக்க: கொரோனா: தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் - மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published:

  Tags: Cuddalore