தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு...

டாஸ்மாக் பார்

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் பார்களில் 50 சதவிகித இருக்கை வசதி பயன்பாட்டுடன் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில், இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் டாஸ்மாக் கடைகளுடன் கூடிய பார்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், ஆறு மீட்டர் இடைவெளி விட்டு அமர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  ஊழியர்கள் கட்டாயம் 40 முதல் 60 விநாடிகள் வரை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் . 50 விழுக்காடு இருக்கைகளை ஆறு மீட்டர் இடைவெளிவிட்டு அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

  மது அருந்தவருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அவர்களுக்கு உடல்வெப்பநிலை, சளி உள்ளிட்ட பரிசோதனைகளை செய்ய வேண்டும். கொரோனா அறிகுறி உள்ளவர்களை அனுமதிக்கக்கூடாது என பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...Ilayaraja | 40 ஆண்டுகளாக பயன்படுத்திய பிரசாத் ஸ்டுடியோவின் அறைகள் அனைத்தையும் காலி செய்தார் இளையராஜா..

  மேலும், வாடிக்கையாளர்கள் அமர பயன்படுத்தும் நாற்காலி, டேபிள்கள் மற்றும் அறைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: