• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டாஸ்மாக் பார் இன்று முதல் திறப்பு: மதுபிரியர்களுக்கு கடும் கட்டுபாடுகள்!

டாஸ்மாக் பார் இன்று முதல் திறப்பு: மதுபிரியர்களுக்கு கடும் கட்டுபாடுகள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

டாஸ்மாக் கடைகளில் பார்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும் மதுபிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மது அருந்துபவர்களுக்கு  இடையே 6 அடி  சமூக இடைவெளி விட வேண்டும். முகக்கவசம்(Mask)  கட்டாயம் அணிந்திருக்கவேண்டும்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் மதுப்பான பார்கள் பல மாதங்களுக்கு  பின்னர் இன்று மீண்டும்  திறக்கப்பட்டன.  மது அருந்த வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைய தொடங்கியது. சட்டமன்ற தேர்தலுக்கு பின் புதிய அரசு அமைந்தது. கொரோன பரவலை கட்டுப்படுத்த திமுக தலைமையிலான புதிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் ஆகியவை செயல்படவும் தடை விதிக்கப்பட்டது.

    கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஜூன் 14-ந்தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. எனினும் பார்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் பார்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, காலை 10 மணிக்கு மதுபான கடைகளில் செயல்படும் பார்களும் செயல்பட தொடங்கின. பார்கள் திறக்கப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பார்களில் கட்டுப்பாடு

    டாஸ்மாக் கடைகளில் பார்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும் மதுபிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாரில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனி பாதையும், வாடிக்கையாளர்களுக்கு தனி பாதையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதேபோல், உள்ளே வரவும் வெளியே செல்லவும் தனித் தனிப் பாதை அமைக்க வேண்டும்.

    இதையும் படிக்க: ஆட்டோ எல்பிஜி கியாஸ் விலையும் வரலாறு காணாத உயர்வு!


    மது அருந்துபவர்களுக்கு  இடையே 6 அடி  சமூக இடைவெளி விட வேண்டும். முகக்கவசம்(Mask)  கட்டாயம் அணிந்திருக்கவேண்டும். பாரில் எச்சில் துப்பக்கூடாது. நுழைவுவாசலில், சானிடைசர் வைக்க வேண்டும். எதேபோல், உடல் வெப்ப நிலையை சோதிக்கும்  தெர்மல் ஸ்கிரீனிங் கருவி வைத்திருக்கவேண்டும். அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் படிக்க: பெட்ரோல் விலை தமிழகத்தில் ரூ.107ஐ கடந்தது: டீசல் விலையும் அதிகரிப்பு!

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: