முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுப்பிரியர்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் கடை மூடல்

மதுப்பிரியர்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் கடை மூடல்

டாஸ்மாக்

டாஸ்மாக்

ஜனவரி மாதத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் எனத் தெரிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 10  மணியில் இருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் தட்டுப்பாடு இல்லாமல் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் ஜனவரி மாதத்தில் டாஸ்மாக் விடுமுறை தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், அனைத்து  மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Also Read: குளிக்கும் படத்தை தோழிக்கு அனுப்பிய இளம்பெண் - வில்லங்கத்தில் முடிந்த விளையாட்டு

அதில், “ ஜனவரி 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26-ந்தேதி குடியரசு தினம் என்பதால் இந்த நாள்கள் எல்லாம் மதுபானம் விற்பனையில்லா தினங்களாக அனுசரிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி மேற்கண்ட நாள்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: நகைக்கடன் தள்ளுபடி கேட்கப்போன விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி

தமிழக அரசு ஜனவரி 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் முழுநேர ஊரடங்கை அறிவித்துள்ளது. இதன்காரணமாக அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனத் தெரிகிறது. இதனையடுத்து ஜனவரி மாதத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Tamilnadu, Tasmac, Wine