• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கையாடல் புகார்கள், கூடுதல் விலைக்கு மதுபானங்கள்... டாஸ்மாக் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் என்ன?

கையாடல் புகார்கள், கூடுதல் விலைக்கு மதுபானங்கள்... டாஸ்மாக் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் என்ன?

கோப்புப் படம்.

கோப்புப் படம்.

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் , கையாடல் போன்ற செயல்களில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் , கையாடல் போன்ற செயல்களில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், அதிக விலைக்கு விற்பனை செய்தல், கையாடல் புகார்கள் அதிகளவில் வருவதாகவும், அவ்வாறுஅதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விற்பனை செய்யும் கடைப்பணியாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அறிவுறுத்தியுள்ளார்.

இனி வரும் நாட்களில் முதுநிலை மண்டல மேலாளர்கள் வாரத்திற்கு 10 சில்லறை விற்பனைக்கடைகளை ஆய்வு செய்து அதிகபட்ச விலையை விட விற்பனை செய்யும் பணியாளர்களை கண்டறிந்து  அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் கிர்லோஸ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Also read... நகைக்கடை உரிமையாளரை தாக்கி துப்பாக்கி முனையில் கொள்ளை... கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

அனைத்து உத்தரவுகளை முறைப்படி பின்பற்ற வேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: