• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் புதிய கட்டணம் - எவ்வளவு உயர்கிறது?

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் புதிய கட்டணம் - எவ்வளவு உயர்கிறது?

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 20 இடங்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்கிறது.

    சேலம் மாவட்டத்தில் ஒமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வைகுந்தம் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில், சமயபுரம், பொன்னம்பலப்பட்டி, திருப்பராய்த்துறையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    Also read... #HBDDearYuvan: வழித்துணை போல இசையுடன் தோன்றியதற்கு நன்றி, யுவன்!



    இதனை தவிர புதூர் பாண்டியபுரம், எலியார்பதி, கொடைரோடு, வேலஞ்செட்டியூர், விஜயமங்கலம், பாளையம், செங்குறிச்சி , மொராட்டாண்டி, திருமாந்துறை, வாழவந்தான்கோட்டை, மணவாசி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்கிறது.

    வாகனங்களின் தரத்திற்கு ஏற்ப 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும், இது வழக்கமான நடைமுறைதான் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: