Home /News /tamil-nadu /

குழந்தை டான்யாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு... போனில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

குழந்தை டான்யாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு... போனில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

சிறுமி டான்யா

சிறுமி டான்யா

முதலமைச்சரால் சிறுமி டான்யா அறுவை சிகிச்சை அறைக்கு பயமில்லாமல் சென்றதாக சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    அரியவகை முகச் சிதைவு நோயால் அவதியுற்ற சிறுமி டான்யாவிற்கு 9 மணி நேர முகம் ஒட்டுருப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றது. சிறுமியின் சிகிச்சை குறித்து அவரது பெற்றோரிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார். 

    பேரி ராம்பெர்க் ஹெமி பேசியல் அட்ராப்பி (Parry Romberg Syndrome Hemifacial atrophy)என்னும் அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யா குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்ட நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஜெர்மன் மருத்துவர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் இன்று 9 மணி நேர உடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

    அறுவை சிகிச்சையை தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக முடித்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தாயாரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். இதனிடையே முதலமைச்சரால் சிறுமி டான்யா அறுவை சிகிச்சை அறைக்கு பயமில்லாமல் சென்றதாக சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க  நன்றி தெரிவித்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி டான்யா. அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதை நியூஸ் 18 தமிழ்நாடு சிறப்பு செய்தி வெளியிட்ட நிலையில், அதன் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட மாவட்ட மருத்துவ குழுவினர் நேரில் வந்து குழந்தை டான்யாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். உடனடியாக டான்யா தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் உள் நோயாளியாக கடந்த 16ம் தேதி அனுமதிக்கப்பட்டார். CTமற்றும் MRI ஸ்கேன் மற்றும் அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

    சிறுமி டான்யா (அறுவை சிகிச்சைக்கு முன்னர் எடுத்த படம் )


    அதன் பின்னர் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 3 நாட்களாக நேரில் சந்தித்த நிலையில். இன்று காலை ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் அதி நவீன (Plastic Reconstructive Surgery with Advanced micro surgical and cranio facial techniques multiple stage of treatment. என்று சொல்லக்கூடிய உடல் micro surgical ஒட்டுறுப்பு சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அறுவை சிகிச்சை வெற்றியடைந்த நிலையில் சிறுமி நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு.நாசர் நேரில் வந்து மருத்துவர்களிடம் டான்யாவுக்கு நடைபெற்ற முக அறுவை சிகிச்சை குறித்து விசாரித்தார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: CM MK Stalin, News18 Impact, Thiruvallur

    அடுத்த செய்தி