Home /News /tamil-nadu /

சிறுமி டான்யா டிஸ்சார்ஜ்.. படிப்பு செலவை அரசே ஏற்பதாக அமைச்சர் நாசர் உறுதி!

சிறுமி டான்யா டிஸ்சார்ஜ்.. படிப்பு செலவை அரசே ஏற்பதாக அமைச்சர் நாசர் உறுதி!

சிறுமி டான்யா

சிறுமி டான்யா

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    முகச்சிதைவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் ; சிறுமி டான்யா குடும்பத்திற்கு வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

    நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியின் எதிரொலியால் அதி நவீன முக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆவடி குழந்தை டான்யா சுமார் 21 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தனது இல்லம் திரும்பினார். தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் அமைச்சர் நாசர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இன்று காலை தண்டலம் சவீதா மருத்துவமனையிலிருந்து தனி ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்ட டான்யா வீராபுரம் வீட்டிற்கு வருகை தந்தார். அப்பொழுது ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் தலைமையில் மிகசிறப்பான வரவேற்பு அளிக்கும் விதமாக பட்டாசு வெடித்தும் ஊராட்சி மன்ற தலைவர் திவாகரின்  துணைவியார் நதியா  குழந்தை டான்யாவிற்கு ஆரத்தி எடுத்து பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். குழந்தை டான்யாவின் பள்ளி நண்பர்கள் டான்யாவிற்கு ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுக்கு சிறுமி டான்யா சாக்லேட் வழங்கினார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி டான்யா (Parry Romberg Syndrome Hemifacial atrophy)(பேரி ராம்பெர்க் ஹெமி பேசியல் அட்ராப்பி. ) என்னும் அறிய வகை முகச்சிதைவு நோயால்பாதிக்கப்பட்டதை கடந்த மாதம் 16ஆம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி தொலைக்காட்சியில் சிறப்பு தொகுப்பு வெளியிட்ட நிலையில் அதன் எதிரொலியாக தமிழக முதலமைச்சர் மு க.ஸ்டாலின்   உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குழந்தையின் வீடு தேடி சென்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளான மருத்துவ காப்பீடு அட்டை,  குடும்ப நல அட்டை உள்ளிட்ட உதவிகளை செய்தார்.



    பின்னர் 17ஆம் தேதி மாலை  தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் முக அறுவை சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டார். 6 நாட்கள் அதாவது 22 ஆம் தேதி வரை  மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட  பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட டான்யாவிற்கு கடந்த மாதம் 23ம் தேதி  காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை சுமார் 9 மணி நேரம் உயர் தொழில் நுட்ப முக அறுவை சிகிச்சையானது 31 மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.



    அதற்குப் பின் 5 நாட்கள் ISOLATED ICUல் குழந்தை டான்யா தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். 6வது நாள்  ISOLATED ICU -வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு கண்காணிக்கப்பட்ட நிலையில். ஆகஸ்ட் மாதம் 29- ஆம் தேதி இரவு 9 மணியளவில் குழந்தை டான்யாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் வந்து நலம் விசாரித்தார்.  அதற்குப் பிறகு சுமார் 15 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த டான்யா இன்று காலை மருத்துவமனையிலிருந்து தனது இல்லம் புறப்பட்டார்.

    இதற்கு முன்னதாக குழந்தை தானியாவிற்கு சிகிச்சையளித்த 31 பேர் அடங்கிய சவீதா மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் குழந்தை தான்யாவுடன் குழு புகைப்படம்  எடுத்துக் கொண்டனர். இதில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் குழந்தையின் பெற்றோர்கள் வரிசையாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



    சவீதா மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், எல்லா புகழும் இறைவனுக்கே.  தமிழக முதல்வர்,  விளிம்பின் நுனியில் இருக்கின்ற சின்னஞ்சிறு பிள்ளை டான்யாவின் அபய குரலை பதிவு செய்தார். சிறுமி டான்யா முக அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது வீடு திரும்பி இருக்கிறார்.  தமிழக முதல்வர் எடுத்த சீரிய முயற்சியால்   இன்றைய தினம் சின்னஞ்சிறு குழந்தையின் பழைய முகத்தை திரும்ப பெரும் முயற்சியில் மருத்துவ குழுவினர் வெற்றி பெற்றுள்ளார்.இன்னும் ஓரிரு மாதங்களில் முகம் பழைய நிலைக்கு திரும்பும் என்று கூறினார்.

     



     

    சிறுமியின் உடல்நலன் குறித்து முதலமைச்சர் நாள்தோறும் கேட்டறிந்தார் என தெரிவித்த அமைச்சர், சிறுமியின் குடும்பத்தினருக்கு விரைவில் வீடு வழங்கப்படும் என்றும், சிறுமியின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் கூறினார்.

    செய்தியாளர் : கன்னியப்பன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai

    அடுத்த செய்தி