Home /News /tamil-nadu /

தஞ்சை மாணவி தற்கொலை : நேரில் சென்று விசாரணை நடத்த 4 பேர் குழுவை அமைத்தது தேசிய பாஜக

தஞ்சை மாணவி தற்கொலை : நேரில் சென்று விசாரணை நடத்த 4 பேர் குழுவை அமைத்தது தேசிய பாஜக

தஞ்சை மாணவி தற்கொலை : நேரில் சென்று விசாரணை நடத்த 4 பேர் குழுவை அமைத்தது தேசிய பாஜக

தஞ்சை மாணவி தற்கொலை : நேரில் சென்று விசாரணை நடத்த 4 பேர் குழுவை அமைத்தது தேசிய பாஜக

Tanjore Student Suicide | தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாபக நேரில் சென்று விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவை தேசிய பாஜக அமைத்துள்ளது.

    அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த நிலையில், அண்மையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். பள்ளி வார்டன் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது.

    தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு மதம் மாற்றமே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் நீதி கேட்டு உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை தமிழக பாஜகவினர் முன்னெடுத்து வருகின்றனர். பாஜகவின் இந்த குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.



    இந்நிலையில் தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரம் குறித்து நேரில் விசாரணை நடத்த நடிகை விஜயசாந்தி உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவை தேசிய பாஜக சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நடிகை விஜயசாந்தி, சந்தியா ராய், சித்திரா தை வாக், கீதா விவேகானந்தா உள்ளிட்டோர் உள்ளனர்.

    இதனிடையே தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “எப்போதும் நான் தான் முதல் மதிப்பெண் பெறுவேன். ஆனால் இந்த ஆண்டு குடும்ப சூழல் காரணமாக பள்ளிக்கு சரியாக செல்ல முடியவில்லை, லேட்டாகத்தான் சென்றான். அதனால் அங்குள்ள சிஸ்டர் என்னை கணக்கு பார்க்க சொல்வார்கள், இல்லை நான் படிக்க வேண்டும் என்று கூற போதும் அவர்கள் என விட மாட்டார்கள். பரவால்ல நீ எழுதி கொடுத்துட்டு உன் வேலையை பாரு என்று வற்புறுத்துவார்கள்“ என்று மாணவி பேசி உள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ariyalur, Student Suicide, Tanjore

    அடுத்த செய்தி