Home /News /tamil-nadu /

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றி உத்தரவு

    தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    தஞ்சை அருகே உள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பிளஸ் – 2 மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். மாணவி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் பள்ளி வார்டன் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தியால் மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி, தூய இருதய அன்னை சபை தலைமை சகோதரி தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Ariyalur, Girl students, Madurai High Court

    அடுத்த செய்தி