பிரபல கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த சசிகலா... சிறப்பு ஹோமத்துடன் சாமி தரிசனம்

பிரபல கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த சசிகலா... சிறப்பு ஹோமத்துடன் சாமி தரிசனம்

சசிகலா

சசிகலா 27 நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லிங்கத்திற்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டார்.

 • Share this:
  திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலுக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா திடீரென் வருகை தந்து சிறப்பு ஹோமத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் 27 நட்சத்திர லிங்க சன்னதி கொண்ட தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும், மத்தியார்ஜுனம் எனவும் சிறப்பு பெற்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று திடீரென திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலுக்கு வருகை தந்தார்.

  அவருக்கு ஆலய நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பளித்தனர். விநாயகரை வழிபட்டு பின்னர் கோயிலுக்குள் வந்த சசிகலா 27 நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லிங்கத்திற்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து பிரகத் சுந்தர குஜாம்பாள் சன்னதிக்கு சென்று வழிபட்டார். சசிகலா வருகையை அறிந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முக்கிய நிர்வாகிகள் சிலர் கோயிலுக்கு படையெடுத்தனர்.

  இந்நிலையில் சசிகலா கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மகாலிங்கேஸ்வரர் சுவாமி கோவில் சாமி தரிசனம் செய்ய வந்த சசிகலா அங்க பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் குடை வழங்கினார். பின்னர் கோவிலை வலம் வந்த அவரது காலில் அமமுக நிர்வாகிகள் விழுந்து வணங்கினார்.
  Published by:Vijay R
  First published: