தஞ்சையில் 3 மணி நேரத்திற்குள் ₹7 கோடி பறிமுதல்... தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

மாதிரி படம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான 2 கோடியே 6 லட்ச ரூபாய் பணத்திற்கும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

 • Share this:
  தஞ்சாவூரில் மூன்று மணி நேரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 7 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கி பணத்தை எடுத்துச் சென்றாலும் அதற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

  இந்நிலையில் தஞ்சை மேலவீதி மூலை அனுமார் கோயில் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முத்தூட் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், உரிய ஆவணங்களின்றி 16 லட்சம் ரூபாய் எடுத்துச் சென்றனர். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து 16 லட்சத்திற்கான ஒரு காசோலையும் பறிமுதல் செய்யப்பட்டது.

  அதேபோன்று அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற சோதனையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான 2 கோடியே 6 லட்ச ரூபாய் பணத்திற்கும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி அருகே நடைபெற்ற சோதனையில் கனரா வங்கி ஏ.டி.எம்.க்கு பணம் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 4 கோடியே 20 லட்சம் ரூபாய் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதஙல செய்யப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 7 கோடி ரூபாயை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published: