Home /News /tamil-nadu /

தஞ்சை மக்களவைத் தொகுதி

தஞ்சை மக்களவைத் தொகுதி

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் பரசுராமன் 5,10,307 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

  • News18
  • Last Updated :
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகவும் கோயில் நகரமாகவும் விளங்கும் தஞ்சை மக்களவைத் தொகுதி 1951-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. இங்கு காங்கிரஸ் கட்சி 7 முறை தனது வெற்றியை பதிவுசெய்துள்ளது. அதன் பின்னர், தஞ்சாவூரை தி.மு.க கைப்பற்றியது. அந்தக் கட்சியும் 7 முறை தனது வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2-வது முறையாக அ.தி.மு.க தஞ்சாவூரில் தனது வெற்றியைப் பதிவு செய்தது. 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் பரசுராமன் 5,10,307 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் த.ரா. பாலு 3,66,188 வாக்குகள் பெற்று தோல்வியைச் சந்தித்தார். தேசிய கட்சிகளான பா.ஜ.க.வின் கருப்பு முருகானந்தம் 58,521 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணசாமி வாண்டையார் 30,232 வாக்குகளையும் பெற்று படுதோல்வியைச் சந்தித்தனர்.

2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 76.63% வாக்குகள் பதிவான நிலையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 1.14% குறைந்து 75.49% வாக்குகள் மட்டுமே பதிவானது.
Published by:Rahini M
First published:

Tags: Cauvery Delta Lok Sabha Elections 2019, Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Thanjavur S22p30

அடுத்த செய்தி