ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரமணா பட பாணியில் இறந்தவர் உடலுக்கு 3 நாட்கள் சிகிச்சை

ரமணா பட பாணியில் இறந்தவர் உடலுக்கு 3 நாட்கள் சிகிச்சை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தஞ்சையில் மூன்று நாட்களுக்கு முன் இறந்தவர் உடலுக்கு சிகிச்சை அளித்து ரமணா பட பாணியில் பணம் பறித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

  நாகை, கீழை ஈசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். 55 வயதான இவர் அரசு போக்குவரத்து துறையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட இவருக்கு, கடந்த 7-ம் தேதி நாகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. சேகரை மேல் சிகிச்சைக்காக தஞ்சையிலுள்ள கே.ஜி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால் அவர் 11-ம் தேதி அங்கு மாற்றப்பட்டார்.

  சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் பணம் செலுத்திய பிறகும், சேகரை பார்க்க அவரது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அங்கிருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சேகரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து 3 நாட்களாகிறது என்று தெரிவித்துள்ளனர்.

  ரமணா பட பாணியில், இறந்தவருக்கு சிகிச்சையளித்து பணம் பெற்ற கே.ஜி மருத்துவமனை மீது தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் சேகரின் மகன் சுபாஷ் புகார் அளித்துள்ளார். இது குறித்து கே.ஜி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது பொய் புகார் கொடுத்திருப்பதாகக் கூறினார்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Dead body, Thanjore hospital, Treatment