தஞ்சையில் 15 வயது சிறுமி கர்ப்பம்.. தாத்தா, தந்தை இருவரும் போக்சோ சட்டத்தில் கைது..

சிறுமி 9ம் வகுப்பு படித்து வந்த நிலையில், அவருக்கு வயிற்றுவலி ஏற்படவே மருத்துவமனைக்கு சென்றதில் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்துள்ளது.

தஞ்சையில் 15 வயது சிறுமி கர்ப்பம்.. தாத்தா, தந்தை இருவரும் போக்சோ சட்டத்தில் கைது..
சித்தரிப்புப்படம்
  • Share this:
தஞ்சையில் 15 வயது சிறுமி கர்ப்பமாக காரணமான தாத்தாவும், அதே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ஒரத்தநாட்டைச் சேர்ந்த இளங்கோவனின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்ததால், அவருடைய 2 மகள்களும் சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மூத்த மகள் மட்டும் அவரது தந்தையுடன் வந்து வசித்துள்ளார்.

அப்போது பெற்ற மகளுக்கு இளங்கோவன் பாலியல் தொல்லை தர, அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை, தாத்தா மாரிமுத்து வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனர். சிறுமி 9-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அவருக்கு வயிற்றுவலி ஏற்படவே மருத்துவமனைக்கு சென்றதில் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்துள்ளது.


மேலும் படிக்க:-

பெற்ற மகளுக்கு தூக்க மாத்திரைகள் அளித்து பாலியல் வன்கொடுமை: தற்கொலைக்கு முயன்ற பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில்..

இது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பினர் மூலம் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. அவர்கள் சிறுமியிடம் விசாரித்ததில் தாத்தா மாரிமுத்து மற்றும் இளங்கோவன் செய்த கொடுமைகள் தெரிய வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து இருவரையும், போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading