• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் டெல்லிக்குப் பயணம்

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் டெல்லிக்குப் பயணம்

விவசாயிகள்

விவசாயிகள்

தமிழகம் முழுவதும் விவசாயிகள் சங்கம் சார்பில் 2,000க்கும் மேற்பட்டோர் டெல்லிக்குச் சென்று போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
டெல்லியில் போராடும், விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயிகள் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எட்டு மாதங்களை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று டெல்லி நோக்கி சோழன் விரைவு இரயிலில் புறப்பட்டனர்.

அதற்கு முன்னதாக தஞ்சை ரயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும், எனவே உடனடியாக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Must Read : நாடாளுமன்றத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்த ராகுல் காந்தி... போராடும் விவசாயிகள் தீவிரவாதிகளா எனக் கேள்வி

இதேபோல, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்டோர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர். டெல்லி செல்லும் விவசாயிகளை, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் விவசாயிகள் சங்கம் சேலம் மாவட்ட குழு சார்பில் வழியனுப்பி வைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் சங்கம் சார்பில் 2,000க்கும் மேற்பட்டோர் டெல்லிக்குச் சென்று போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: