தஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்!

தஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவி 32 லட்ச ரூபாய்க்கு ஏலம்!
  • Share this:
தஞ்சை அருகே ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு 32 லட்ச ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அருகே நடைபெற்ற ஊர்க்கூட்டத்தில் திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு 32 லட்ச ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், திருமங்கலக்கோட்டை தொண்டைமான் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதற்காக 32 லட்ச ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், முன்பணமாக 2 லட்ச ரூபாயை கட்ட வேண்டும் என்றும், மீதமுள்ள 30 லட்ச ரூபாயை 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

சுரேஷ் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை செலுத்த தவறினால் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading