Home /News /tamil-nadu /

Exclusive : ''தஞ்சை மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் அல்ல'' - உண்மை அறியும் குழு தகவல்

Exclusive : ''தஞ்சை மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் அல்ல'' - உண்மை அறியும் குழு தகவல்

விடுமுறையின்போதும் விடுதியில் இருந்து மாணவி வீட்டிற்கு செல்வதில்லை. விஷம் குடித்த விபரத்தை மாணவி தனது விடுதி வார்டனிடம் கூறவில்லை.

விடுமுறையின்போதும் விடுதியில் இருந்து மாணவி வீட்டிற்கு செல்வதில்லை. விஷம் குடித்த விபரத்தை மாணவி தனது விடுதி வார்டனிடம் கூறவில்லை.

விடுமுறையின்போதும் விடுதியில் இருந்து மாணவி வீட்டிற்கு செல்வதில்லை. விஷம் குடித்த விபரத்தை மாணவி தனது விடுதி வார்டனிடம் கூறவில்லை.

    தஞ்சை மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் அல்ல என்று உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்ற 17 வயது மாணவி ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவரை மதமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதே காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனை பள்ளி நிர்வாகம் மறுத்த நிலையில், தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், மாணவியின் தற்கொலை தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பு மையம், கல்வி உரிமை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தியுள்ளன. ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் மூர்த்தி, நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

    இதையும் படிங்க - 'மேற்கு வங்கத்தைப் போல தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கும் நிலை வரலாம்' - எடப்பாடி பழனிசாமி

    மதமாற்றத்தால்தான் தஞ்சை மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்பதில் உண்மையில்லை என்றுதான் எங்களது குழு முடிவுக்கு வருகிறது. குடும்பச் சூழல்தான் அந்த குழந்தையின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்துள்ளது. குடும்பத்தில் அந்த குழந்தைக்கு பற்றுதலாக அம்மாவோ, தந்தையோ இல்லாத சூழல் இருந்திருக்கிறது; பெற்றோரின் ஆதரவு இல்லாத சூழல் அந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - வாக்கு சேகரிக்க சென்ற பாஜக மண்டல துணை தலைவரின் மண்டை உடைப்பு: திமுக பிரமுகர் கைது

    விடுமுறையின்போதும் விடுதியில் இருந்து மாணவி வீட்டிற்கு செல்வதில்லை. இதற்கான காரணத்தை அறிந்து, குடும்ப பிரச்னையை பள்ளியால் நிவர்த்தி செய்ய முடியாமல் போய்விட்டது. இவைதான் தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களாக நாங்கள் அறிந்தவை. இந்த பள்ளி சூழலும், குடும்ப சூழலும்தான் குழந்தையின் தற்கொலைக்கு காரணங்கள்.

    விஷம் குடித்த விபரத்தை மாணவி தனது விடுதி வார்டனிடம் கூறவில்லை. பள்ளி தலைமை ஆசிரியரிடமும் தெரிவிக்கவில்லை. ஞாயிற்றுக் கிழமையன்று மாணவி விஷம் குடித்துள்ளார். தொடர்ந்து அவர் வாந்தி எடுத்ததால், விடுதி வார்டன் அவரை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள நர்ஸிடம் காண்பித்துள்ளார். மருந்துகள் சாப்பிட்ட பின்னரும் இரவில் அந்த குழந்தை தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தது. ஆனால் விடுதி வார்டனுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மென்சஸ் பிரச்னைதான் வாந்திக்கான காரணமாக இருக்கும் என வார்டன் யூகித்துக் கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க - தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை.. படகுகளும் சிறை பிடிப்பு

    காலையிலும் குழந்தை வாந்தி எடுத்ததால் பெற்றோரை அழைத்து பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர். அதுவரைக்கும் மாணவி விஷம் அருந்தியுள்ளார் என்கிற விபரம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாது.

    மாணவியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றதில் இருந்து, பெற்றோரிடம் அந்த குழந்தை என்ன சொன்னது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால், அந்தப் பெற்றோர் முழுக்க முழுக்க ஒரு கட்சியின் ஆதரவாக அவர்களுடனேயே இருக்கின்றனர். அதனால் அவர்களை சந்திக்க முடியவில்லை. உடனடி சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்பதுதான் எங்களது உண்மை அறியும் நடவடிக்கையில் தெரியவருகிறது.


    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Student Suicide, Tanjore

    அடுத்த செய்தி