Home /News /tamil-nadu /

நிலுவை தொகையை செலுத்தி தமிழகத்தில் மின்தடை ஏற்படாமல் தடுங்கள் - ராமதாஸ் வேண்டுகோள்

நிலுவை தொகையை செலுத்தி தமிழகத்தில் மின்தடை ஏற்படாமல் தடுங்கள் - ராமதாஸ் வேண்டுகோள்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும் - ராமதாஸ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி மின்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதை மீண்டும் தொடங்க வேண்டும்  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் இன்று முதல் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,  “மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்திற்காக மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.926 கோடியை செலுத்தத் தவறியதால், மின்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் பின்னடைவு ஆகும்.

    தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் வாங்குவது தவிர, மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது.

    தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக் கூடும்.

    இதையும் வாசிக்க: உதவி பேராசிரியர்களுக்கு அநீதி! ராமதாஸ் கண்டனம்

    மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விலக்கச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும்.”என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Electricity, Ramadoss, Tamilnadu

    அடுத்த செய்தி