Home /News /tamil-nadu /

டெல்டா மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

டெல்டா மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

கஜா புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.   

    கஜா புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்கள் கஜா புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் இம்மாதம் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர் அபராதம் இன்றி  கட்டணத்தை செலுத்த நவம்பர் 30 வரை, மின் வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது. இவ்வாறு அந்த  செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Cyclone Gaja, Electricity bill, TANGEDCO

    அடுத்த செய்தி